Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 பெப்ரவரி 05 , மு.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவ்ராஜ், இலங்கைக்கு இன்று வெள்ளிக்கிழமை வரவுள்ளார்.
இலங்கை - இந்தியா ஒன்றிணைந்த ஆணைக்குழுவின் 9ஆவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே அவர், இலங்கைக்கு வருகின்றார்.
இலங்கை - இந்தியா ஒன்றிணைந்த ஆணைக்குழு மாநாடு, இன்று 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் அதன் இணைத்தலைவராக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பங்கேற்கவுள்ளார்.
1992 ஆம் ஆண்டு இந்த ஆணைக்குழு உருவாக்கப்பட்டதுடன் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை பாதிக்கும் நடவடிக்கைகளுக்கு தீர்வுக் காண்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.
இந்த விஜயத்தின் போது, சுஷ்மா சுவ்ராஜ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரை சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, அலரிமாளிகையில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.15க்கு சந்திக்கவுள்ளார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago