2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

வரிச் சுமை: நிரந்தரம் அல்ல

Princiya Dixci   / 2016 ஜூன் 02 , பி.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி. நிரோஷினி

'நாட்டு மக்களுக்கு விதிக்கப்பட்ட வரிச் சுமையானது தற்காலிகமானதே தவிர, நிரந்தரமானதில்லை. எனவே, தற்போதுள்ள வரி அதிகரிப்பு தொடர்பில், ஐரோப்பிய ஒன்றிய விசாரணைக்குழுவுடன் கலந்துரையாடி, GSP+ வரிச் சலுகையில் நல்லதொரு முடிவை எடுப்போம்' எனப் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், 'இலங்கைக்கு 0.1 சதவீத வட்டி என்ற அடிப்படையில், 38 பில்லியன் யென் அபிவிருத்தி உதவிக் கடனை வழங்குவதற்கு ஜப்பான் இணக்கம் தெரிவித்துள்ளது. இது எமக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதமாகும்' என்றார்.

'மேலும், கொழும்பு - கண்டி அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளின் 3ஆம் கட்ட அபிவிருத்திப் பணிக்கான செலவை ஜப்பான் ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பில் விரைவில் கலந்துரையாடப்பட்டு நிதி ஒதுக்கீடு பற்றி அறிவிக்கப்படும். அந்தவகையில், கலகெதரப் பகுதியிலிருந்து இதன் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதேபோல் களனிப் பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்கும், ஜப்பான் கடனுதவிகளை வழங்கும்' என்று அமைச்சர் ஹர்ஷ டி சில்வா மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .