Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2015 நவம்பர் 30 , பி.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரிவிலக்கு வாகன சலுகை வசதியை மீளக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் தவறுமாயின், இலங்கை நிர்வாக சேவைகள் அதிகாரிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், மாவட்ட, பிரதேச செயலாளர்கள் ஆகியோர், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவார்களென, இலங்கை நிர்வாக சேவைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் றோஹண டி சில்வா எச்சரித்துள்ளார்.
அத்தோடு, அரசாங்க வைத்தியர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், நில அளவையாளர்கள், அரசாங்க வழக்கறிஞர்கள் ஆகியோரும், இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையில் இணைந்து கொள்வார்களென, அவர் எச்சரித்தார்.
இது தொடர்பான முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கான கூட்டமொன்று, நேற்று இரவு இடம்பெறவிருந்ததாகத் தெரிவித்த அவர், தொழிற்சங்க நடவடிக்கையொன்று தேவைப்பட்டால், அதை எப்போது நடத்துவது என்பதற்கான முடிவு, அக்கூட்டத்தில் எடுக்கப்படுமெனத் தெரிவித்தார். அத்தோடு, அவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டால், அவ்வாறான முதலாவது சந்தர்ப்பமாக இது அமையுமென அவர் குறிப்பிட்டார்.
'2010ஆம் ஆண்டிலிருந்து நாம் அனுபவித்துவந்த சட்டரீதியான சிறப்புரிமையை மீளக்கொண்டுவருவதற்கு, தொழிற்சங்க நடவடிக்கையைப் பயன்படுத்துவதற்கு நாம் தீர்மானத்துடன் காணப்படுகிறோம். எனினும், அரசாங்கத்தினதும் அரச துறையினதும் நலன்களை விட்டுக்கொடுக்காமல், இந்த விடயத்தை இணக்கமாகத் தீர்ப்பதற்கு நாம் முயல்கிறோம்' என அவர் குறிப்பிட்டார்.
'இந்த வரவு- செலவுத்திட்டத்துக்கு முன்னதாக, மேலதிக கொடுப்பனவுகளை அடிப்படைச் சம்பளத்துடன் இணைப்பதாக அரசாங்கம், வாக்குறுதியளித்திருந்தது. அதைச் செய்வதற்குப் பதில், எங்களிடமிருந்த பல சிறப்புரிமைகளை அது பறித்துள்ளது' எனக் குற்றஞ்சாட்டினார்.
இதேவேளை, கருத்துத் தெரிவித்த அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உப பொதுச் செயலாளர் நவின் டி
சொய்ஸா, வைத்தியர்களுக்கான வரி விலக்களிப்புச் சலுகைகளைக் கொண்டுவரத் தவறும்பட்சத்தில், தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஏற்கெனவே தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
1 hours ago
26 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
26 Aug 2025