2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘வரட்சியால் வனப்பகுதிகளில் தீப்பரவல்’

Editorial   / 2019 ஜனவரி 07 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் வரட்சி நிலவி வரும் நிலையில், அங்கு காணப்படும் வனப்பகுதிகளில் சிலர் தீ வைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் பாதுகாப்பு திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொசெல்ல மற்றும் ஹட்டன் ரயில் நிலையத்துக்கருகில் ஸ்டேடன் தோட்ட வனப்பகுதியில், நேற்றைய தினம் இனந்தெரியாத சிலரால் தீ வைப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இதனால் குறித்த வனப்பகுதியில் 10 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகி அழிவடைந்துள்ளதோடு, இன்று (07) அதிகாலையிலேயே தீ கட்டுபாட்டுக்குள் ​கொண்டுவரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்தோடு சில நாள்களுக்கு முன்னர் காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு அண்மித்த சிங்கமலை வனப்பகுதியிலும் தீப்பரவல் சம்பவமொன்று இடம்பெற்று 50 ஏக்கர் நிலப்பரப்பு அழிவடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .