2025 மே 01, வியாழக்கிழமை

’வரி நீக்கம் தொடர்பில் எமக்குத் தெரியாது’

Freelancer   / 2021 ஓகஸ்ட் 11 , பி.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பால்மா மீதான இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறினாலும், அது குறித்து இறக்குமதியாளர்களுக்கு அறிவிக்கப்படவில்லை என பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வர்த்தமானி அறிவித்தல் மூலமே பால்மாவை  மீண்டும் இறக்குமதி செய்யலாமா, வேண்டாமா என்று முடிவு செய்யவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வரி நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறியிருந்தாலும்  எந்த வரி நீக்கப்பட்டுள்ளது மற்றும் வரிகளின் மதிப்பு என்பதை அறியாமல் எதிர்கால முடிவு தொடர்பில் தீர்மானிக்க முடியாது என்று இலங்கையின் முன்னணி பால்மா உற்பத்தி நிறுவனத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவு வெளியிட்டால் தீர்மானம் தொடர்பில் நாளை அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .