2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வர்த்தக நிலையத்திலிருந்து சடலம் மீட்பு

Editorial   / 2019 ஜனவரி 29 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பலங்கொடை – கந்தேகொட பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் ​பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் அவ்வர்த்தக நிலையத்தின் உரிமையாளரென கண்டறியப்பட்டுள்ளது.

அத்தோடு வர்த்தக நிலையத்தின் பின்பக்க கதவு உடைத்து திறக்கப்பட்டிருந்ததாகப் பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த வர்த்தக நிலையத்தில் கொள்ளையிடுவதற்காக வருகை தந்திருக்கும் கும்பலால் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பலப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .