2025 ஜூலை 21, திங்கட்கிழமை

‘வற்’வழக்கை தொடரவில்லை: உயர்நீதிமன்றம்

Editorial   / 2025 ஏப்ரல் 08 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “சேர்பெறுமதி வரி (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை கௌரவ பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “சேர்பெறுமதி வரி (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட மனு மீதான உயர்நீதிமன்றத்தின் தீர்மானமானது சபாநாயகருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி பாராளுமன்றத்தில் இன்று (08) அறிவித்தார்.

அதற்கமைய, அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உறுதிமொழியினைக் கருத்திற்கொண்டு மனுதாரர்கள்  S.C (SD) 05/2025 மற்றும் S.C. (SD) 06/2025 ஆகிய இரு மனுக்களையும் தொடருவதில்லை என முடிவு செய்துள்ளதால் குறித்த சட்டமூலத்தின் அரசியலமைப்புடன் இணங்கும் தன்மை தொடர்பாக உயர் நீதிமன்றம் தீர்மானமொன்றை வழங்கவில்லை என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .