Editorial / 2023 நவம்பர் 15 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

துசித குமார டி சில்வா
பேருவளை பிரதேசத்திற்கு ஐந்து இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட வலம்புரி சங்குடன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் பேருவளை பொலிஸாரால் புதன்கிழமை (14) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதேசத்தில் இருந்து முச்சக்கரவண்டியில் சந்தேக நபர், வலம்புரி சங்கை எடுது்து வந்துள்ளதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என பேருவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 22 வயதுடைய சந்தேக நபர் சில காலம் இராணுவத்தில் கடமையாற்றியவர் எனவும் வலம்புரி சங்கின் எடை 160 கிராம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .