Janu / 2026 பெப்ரவரி 10 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 55 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் வெளிநாட்டுப் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் பணிபுரியும் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் செவ்வாய்க்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இலங்கையில் செயல்படும் அபிவிருத்தி திட்டமொன்றில் பணியாற்றும், ஈரானைச் சேர்ந்த 45 வயதுடைய பொறியியலாளர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் ஏர் அரேபியா விமானம் G9502 விமானம் மூலம் ஷார்ஜாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.
அவர் கொண்டு வந்த பயணப் பையில் இருந்து ஈரானில் உள்நாட்டு பயன்பாட்டிற்காக தயாரிக்கப்பட்ட 36,860 "பஹ்மான்" சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago