Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 டிசெம்பர் 18 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா பொது வைத்தியசாலையில் இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாத காலப்பகுதியில் மாரடைப்பால் 45 பேர் மரணம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கோரப்பட்ட தகவலுக்கு அமைய குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் 20 வயது தொடக்கம் 40 வயதுக்கு உட்பட்டவர்களில் ஒருவரும், 40 வயது தொடக்கம் 60 வயதுக்கு உட்பட்டவர்களில் 13 பேரும், 60 வயது தொடக்கம் 100 வயதுக்கு உட்பட்டவர்களில் 31 பேருமாக 45 பேர் இவ்வாறு மாரடைப்பால் மரணமாகியுள்ளனர்.
வவுனியாவில் மாரடைப்பால் மரணிப்போரின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து காணப்பட்ட நிலையில் அதற்கான பல்வேறு காரணங்களும் சுகாதார திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .