2025 ஜூலை 07, திங்கட்கிழமை

விஸ்கி போத்தல்கள் ,ஏலக்காயை கடத்த முயன்ற நால்வர் கைது

Simrith   / 2025 ஜூலை 06 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று (6) அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சுமார் 15 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பெரிமளவிலான விஸ்கி போத்தல்கள் மற்றும் ஏலக்காயை கடத்த முயன்ற நான்கு இலங்கை விமான பயணிகள் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

அதிகாலை 1:00 மணியளவில் இந்தியாவின் பெங்களூரிலிருந்து இண்டிகோ விமானம் 6E-1183 மூலம் வந்த பயணிகள், வெளிநாட்டுப் பயணத்திலிருந்து திரும்பி வந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் கொழும்பு மற்றும் ஹட்டன் பகுதிகளில் வசிப்பவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சுங்க அதிகாரிகள் வழக்கமான சோதனையை செய்தபோது கடத்தல் பொருட்களை கண்டுபிடித்தனர். வெளிநாட்டில் வரி இல்லாத ஒரு விற்பனை நிலையத்திலிருந்து வாங்கப்பட்ட 378 விஸ்கி போத்தல்கள் மற்றும் 132 கிலோகிராம் ஏலக்காய் ஆகியவை இதில் அடங்கும்.

வணிக நோக்கம் மற்றும் சுங்க மீறல்கள் தொடர்பான சந்தேகங்களின் கீழ் இந்தப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சம்பவம் குறித்து தற்போது மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .