2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

வாக்குவாதம் முற்றி கொலையில் முடிந்த சோகம்

Freelancer   / 2025 ஒக்டோபர் 13 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் - குடாகல்கமுவ பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று இரவு கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான நபர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குடாகல்கமுவ - பெபொல்வெல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தனது சகோதரரின் வீட்டில் வேறொரு குழுவுடன் மது அருந்திக் கொண்டிருந்த நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது, உயிரிழந்தவரை சகோதரர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சம்பவத்தின் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சடலம் குருநாகல் வைத்தியசாலையின், பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X