2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

வாழைப்பழ சீப்பை கொடுத்தவர் கைது

Freelancer   / 2023 செப்டெம்பர் 30 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழைக்குலையில் வெட்டியெடுக்கப்பட்ட ஒரேயொரு சீப்பை எடுத்துச் சென்று கொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம், களுத்துறையில் இடம்பெற்றுள்ளது. களுத்துறை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இரண்டு கைதிகளை பார்வையிடுவதற்கு வாழைப்பழ சீப்புடன் ஒருவர் சென்றுள்ளார்.

அந்த வாழைப்பழ சீப்புகளுக்குள் 3 மற்றும் 4 அங்குல ஸ்டோக்கள் 16 இருந்துள்ளன. அதற்குள் இருந்து போதைப்பொருள்கள் மீட்கப்பட்டன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் களுத்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவரிடம் களுத்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X