2025 நவம்பர் 01, சனிக்கிழமை

விசேட நீதிமன்றத்துக்கு ஜனவரியில் சட்டமூலம்

Editorial   / 2017 நவம்பர் 16 , மு.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதிசார்ந்த குற்றம் மற்றும் ஊழல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் ஆகியனவற்றை விசாரணைக்கு உட்படுத்துவதற்காக , நிறுவப்படவிருக்கின்ற விசேட மேல் நீதிமன்றத்துக்கான சட்டமூலத்தை, எதிர்வரும் ஜனவரி மாதத்தில், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக, தகவல்  வெளியாகியுள்ளது.

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 35ஆல் அதிகரிப்பதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, நீதியமைச்சு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், தற்போது 75ஆக இருக்கின்ற மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 110 வரையிலும் அதிகரிக்கும் என்றும் அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

அதேநேரத்தில், நீதிமன்றத் தொகுதியில் கிடப்பில் போடப்பட்டுள்ள நிதிசார்ந்த குற்றம் மற்றும் ஊழல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் ஆகியனவற்றை விசாரணைக்கு உட்படுத்துவதற்காக, விசேட மேல் நீதிமன்றங்கள் மூன்றை நிறுவுவதற்கும் அதனூடாக அந்த வழக்குகளைத் துரிதகதியில் விசாரணைக்கு உட்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென நீதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தானியக்கி வழக்கு கோப்புகளை முகாமைத்துவம் செய்வதற்கான தொகுதியை இதனூடாக நிறுவுவதற்கும், 2018ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்டத்தின் ஊடாக நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், புதிய முறைமையின் கீழ், கிடப்பில் உள்ள வழக்குகளைத் துரிதமாக விசாரணைக்கு உட்படுத்த முடியுமென்றும் நீதியமைச்சு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X