2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

விஜேவீர படுகொலை: தொரதெனிய கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்

Editorial   / 2025 ஜூலை 16 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் விடுதலை முன்னணியின் ​(ஜே.வி.பி) ஸ்தாப தலைவர் ரோஹண விஜேவீரவின் கொலையில் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அசோக தொரதெனியவுக்கு தொடர்பு இருப்பதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் இந்திரானந்த டி சில்வா கூறிய குற்றச்சாட்டுகள் காரணமாக தொரதெனிய ஒரு வழக்கைத் தாக்கல் செய்து, தனது பெயரைப் பயன்படுத்துவதைத் தடுக்க தடை உத்தரவைக் கோரினார்.

நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து தடை உத்தரவு விண்ணப்பத்தை நிராகரித்தது. அந்த வழக்கின் தீர்ப்பு செவ்வாய்க்கிழமை (15) வழங்கப்பட்டது,

வழக்கின் தீர்ப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு பின்வரும் கருத்துக்களை இந்திரானந்த தெரிவித்தார்.

"ரோஹண விஜேவீர கொலை தொடர்பாக தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் அறிக்கைகளை வெளியிடுவதைத் தடைசெய்து மேஜர் ஜெனரல் அசோக தொரதெனியவனா என் மீது தொடுத்த வழக்கு,   கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பின்  மூலம்   அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் நான் விடுவிக்கப்பட்டுள்ளேன்.   

இந்த வழக்கு மின்னணு ஊடக பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், இந்த உண்மைகளை நாங்கள் சுமார் முப்பது ஆண்டுகளாக நாட்டிற்கு வெளிப்படுத்தி வருகிறோம் என்றும், இது ஒரு புதிய விஷயம் அல்ல என்றும் எழுத்துப்பூர்வமாகக் காட்டியுள்ளோம்.

மேலும், சிறையில் இருந்து சட்டமா அதிபருக்கு 1996 நவம்பரில்,  அனுப்பப்பட்ட மனு மூலம் இந்த உண்மைகளை விரிவாக வெளிப்படுத்தினேன், மேலும் நான் ஒரு புகைப்படக் கலைஞராக நாடு முழுவதும் உள்ள சித்திரவதை அறைகளுக்குச் சென்று கொல்லப்பட்டவர்களின் புகைப்படங்களை எடுத்துள்ளேன் என்றும் எழுத்துப்பூர்வமாகக் காட்டியுள்ளோம்.

அத்தகையவர்கள் என் கண்களுக்கு முன்பாகக் கொல்லப்படுவதை நான் கண்டேன், அனைத்தும் வெளிப்பட்டுவிட்டன. இப்போது இது "வழக்கில் இருந்து நான் விடுவிக்கப்பட்ட பிறகு, ரோஹண விஜேவீர கொலையில் தொடர்புடைய அனைத்து கொலையாளிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திற்கு நான் சவால் விடுகிறேன்.

குறிப்பாக இப்போது அவர் தலைமையிலான கட்சியின் தற்போதைய தலைவர் ஆட்சியில் இருக்கிறார். அப்படியானால், அதை மேலும் தொடர விடாமல், தங்கள் தலைவரை உயிருடன் கொடூரமாகக் கொன்ற கொலையாளிகளுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது." என்றார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .