Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
எம். றொசாந்த் / 2017 ஒக்டோபர் 20 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். றொசாந்த்
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் குற்றவாளிகளால், உயர்நீதிமன்றில் முன்வைக்கப்படும் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் நிறைவுபெற, குறைந்தது ஐந்து ஆண்டுகள் எடுக்கும் என, சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்தன தெரிவித்தார். ஐந்து குற்றவாளிகள் சார்பில் யாழ்ப்பாணம்மேல் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவை முன்வைத்த பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“வித்தியா படுகொலை வழக்கின் மூலப்பிரதிகள் (ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற வழக்குப் பதிவேடு மற்றும் தீர்ப்பாயத்தின் பதிவேடு), சிங்கள மொழிக்கு மாற்றப்பட வேண்டும். அவை சுமார் 4,000 பக்கங்களைக் கொண்டவை. அதற்காகக் குறைந்தது ஓர்ஆண்டு போய்விடும்.
“பிரதமர நீதியரசர், ஐந்து நீதியரசர்கள் அடங்கிய நீதியரசர்கள் குழாமை நியமிக்க வேண்டும். அந்தக் குழாம், வழக்கை முழுமையாகப் படிக்க வேண்டும். அதன்பின்னர் ஒவ்வொரு விடயத்திலும் உள்ள தவறுகளை நாம் சுட்டிக்காட்ட முடியும்.
“எனவே, ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னே இறுதி முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன்” என்று சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்தன மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago
9 hours ago
03 May 2025