2025 ஜூலை 05, சனிக்கிழமை

வினாத்தாள்கள் உரிய நேரத்தில் வழங்கப்படாமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

Editorial   / 2018 டிசெம்பர் 11 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்வி பொதுதராதர சாதாரணத் தர பரீட்சையில் இன்றைய பரீட்சையின் வினாத்தாள்கள் உரிய நேரத்தில் வழங்கப்படாமைக் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

அம்பாறை பண்டாரநாயக்க மகளிர் பாடசாலையிலும் அம்பாறை டீ.எஸ்.சேனநாயக்க மத்திய மகா வித்தியாலயத்திலும் இன்று காலையில் 8.30  மணிக்கு வழங்கப்பட வேண்டிய அழகியற் பாடங்கள் தொடர்பான வினாத்தாள்கள்  10 மணியளவிலேயே வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலைகளுக்கு அனுப்பவேண்டிய வினாத்தாள்கள் மொனராகலை பிரதேசத்துக்கு அனுப்பப்பட்டமையே இதற்கான காரணமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் ஆசிரியர் சேவைகள் சங்கம் ஊடாக பரீட்கைள் ஆணையாளருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 அதற்கமைய, இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .