2025 ஜூலை 05, சனிக்கிழமை

விபசார விடுதி சுற்றிவளைப்பு ; பிரபல நடிகை உட்பட நால்வர் கைது

Editorial   / 2019 ஜனவரி 10 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீதுவ பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட விபசார விடுதியொன்றை ​பொலிஸார் சுற்றிவளைத்துள்ளதோடு, அதிலிருந்த நால்வரை கைது செய்துள்ளனர்.

குறித்த நால்வரில் ஒருவர், பிரபல தொலைக்காட்சி நாடக நடிகை என்றும் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அத்தோடு குறித்த மசாஜ் நிலையத்தின் உரிமையாளர் சுற்றிவளைப்பின் போது இருக்கவில்லையென்றும், குறித்த நபரால் 20 கிளைகள் நடாத்தி செல்லப்படுவதாகவும், மேலும் மணித்தியாலமொன்றுக்கு 10ஆயிரம் ‌‌‌‌‌‌‌ரூபாய் வரை வழங்கப்படுவதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த சுற்றிவளைப்பானது, மேல் மாகாண வட பிரிவின் பிரதி பொலிஸ் அதிகாரி தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .