Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2023 ஜூன் 14 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பெரும் பணக்காரர்கள் வந்து செல்லும் கொள்ளுப்பிட்டியில் இரண்டு மாடிக் கட்டடத்தில் நடத்தப்பட்ட விபச்சார விடுதியை சுற்றிவளைத்து அழகான தாய்லாந்து பெண்கள் இருவர் உட்பட ஐந்து பேரை கைது செய்ததாக பாணந்துறை வலன ஊழல் ஒழிப்பு செயலணி தெரிவித்துள்ளது.
ஏனைய சந்தேக நபர்களில் இலங்கையைச் சேர்ந்த அழகிய யுவதியும் முகாமையாளரும் இந்த விபச்சார மோசடியை நடத்தும் முன்னாள் இராணுவ அதிகாரியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நாட்டின் அழகிய பெண் தனது ஏழு வயது மகளை குறித்த இடத்திற்கு அழைத்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு 3, கொள்ளுப்பிட்டியில் இரண்டு மாடிக் கட்டிடத்தில் விபச்சார நிலையம் இரகசியமாகக் நடத்தப்படுவதாக பாணந்துறை வலன மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப் படையின் பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உதய குமாரவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிடைத்த தகவலின் அடிப்படையில் கோட்டை நீதவான் நீதிமன்றில் இருந்து பெறப்பட்ட தேடுதல் உத்தரவின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
பொலிஸ் சார்ஜன்ட் முகவர் வேடமணிந்து, பெண் ஒருவரை 10,000 ரூபாவுக்கு வாங்கிக் கொண்டு அறைக்குள் நுழைந்த நேரத்திலேயே இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த இடத்தில் தங்கியிருந்து விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட தாய்லாந்து இளம் பெண்கள் இருவரிடமும் கடவுச்சீட்டு கூட இல்லை என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
கைது செய்யப்பட்ட 24 வயதுடைய இலங்கைப் பெண் சுமார் பத்து கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை வைத்திருப்பவர் எனவும், அவருக்கு சொந்தமான மூன்று சொகுசு கார்கள் மற்றும் பிலியந்தலையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மூன்று மாடி வீடு உள்ளன எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில், அவர் அதே வேலையில் இருந்து இந்த சொத்துக்களை சம்பாதித்ததாக தெரியவருகின்றது.
இதேவேளை சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான இராணுவ அதிகாரி சுகயீனத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததால் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட அழகிய தாய்லாந்து சிறுமிகளிடம் வாக்குமூலம் பெறுவதற்கு தாய்லாந்து தூதரகத்தின் ஊடாக மொழிபெயர்ப்பாளரின் உதவியைப் பெறவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
3 hours ago
4 hours ago