2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

விபத்தில் 5 வயது குழந்தை பலி

Editorial   / 2020 ஓகஸ்ட் 15 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுபொத, கல்வெவ பகுதியில் இடம்பெற்ற ஓட்டோ  விபத்தில் 5 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

கட்டுபொத​ நோக்கிப் பயணித்த ஓட்டோவுக்குக் குறுக்காக நாய் ஒன்று பாய்ந்ததால், கட்டுப்பாட்டை இழந்த ஓட்டோ எதிரே வந்த தனியார் பஸ்ஸில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தால் ஓட்டோவின் பின்னால் அமர்ந்து சென்ற குழந்தை படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்ருந்தபோதிலும், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த நால்வரும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .