2025 ஜூலை 05, சனிக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Editorial   / 2019 ஜனவரி 05 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

தும்மலசூரிய – உடுபந்தாவ, நாத்தான்டிய வீதியின் துனகதெனிய வைத்தியசாலைக்கு அருகில் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தும்மலசூரிய – உடுபந்தாவ, தல்கஹபொத்த பகுதியைச் சேர்ந்த ஆராச்சிகே நாமல் சுரேந்து ( வயது 34) என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளாரென, தும்மலசூரிய பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர், மோட்டார் சைக்கிளில் உடுபந்தாவ பகுதியை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி வீதியோரத்தில் உள்ள சிறிய பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானார்.

இவ்விபத்தில், படுகாயமடைந்த நபர் துனகதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .