Freelancer / 2021 செப்டெம்பர் 18 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராகலை - சூரியகாந்தி சந்திக்கு அண்மித்த பகுதியில் விபத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து நேற்று இரவு 7.45 மணியலவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வலப்பனை பகுதியிலிருந்து நுவரெலியாவை நோக்கி பயணித்த லொரி ஒன்றும், இராகலையிலிருந்து வலப்பனை பகுதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்து சம்பவித்துள்ளது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வலப்பனை பிரதேச சபையின் மாகுடுகலை வட்டார உறுப்பினர் ஒருவர் பலத்த காயங்களுக்கு இலக்கான நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராகலை பொலிசார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் இராகலை பொலிசார் லொரியின் சாரதியை கைது செய்துள்ளதுடன், விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் மற்றும் லொரியை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர். R
8 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago
4 hours ago