2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விமான நிலையத்தில் குண்டு: மாணவன் சிக்கினார்

Editorial   / 2023 மார்ச் 26 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக தன்னுடைய அலைபேசியில் இருந்து போலியான அழைப்பை எடுத்து அச்சுறுத்தல் தகவலை வழங்கிய 14 வயதான மாணவன், கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார் என விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

விமான நிலையத்தின் அவசர பிரிவுக்கு நேற்று (25) மாலை அழைப்பு எடுத்திருந்த மேற்படி மாணவன், விமான நிலையத்துக்குள் குண்டு இருப்பதாக தகவல் கொடுத்துள்ளார்.

அந்தத் தகவலின் பிரகாரம் உடினடியாக சோதனை நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

எனினும், சில நிமிடங்களின் பின்னர் மீண்டும் அழைப்பை எடுத்த அதே மாணவன், “ குண்டு இல்லை. நகைச்சுவைக்காக அழைப்பை எடுத்தே இவ்வாறு பொய் கூறினேன்” என தெரிவித்துள்ளார்.

அலைபேசியின் அழைப்பை வைத்து, களுபோவில சுனந்தாராம வீதியை வீதியைச் சேர்ந்த மாணவனை பொலிஸூக்கு அழைத்த பொலிஸார், இதன் பாரிய விளைவுகள் தெரியாமல் அழைப்பை எடுபடுத்தியமையால், கடுமையாக எச்சரித்து மாணவனை விடுவித்துள்ளோம் என்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X