2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

விமான விபத்துக்கான காரணத்தை வெளியிட்டது பாதுகாப்பு அமைச்சு

Editorial   / 2020 ஜனவரி 03 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா. நிரோஷ்குமார்

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான Y-12 ரக விமான விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ, குறித்த விமானம் தாழ்வாகப் பறந்தமையே விபத்துக்குக் காரணமெனவும் தெரிவித்தார்.

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான Y-12 ரக விமானம், ஹப்புத்தளையில் விபத்துக்குள்ளாகியதில், நால்வர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், குறித்த விபத்துக்கு விமானம் தாழ்வாகப் பறந்தமையே காரணமெனத் தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், விபத்து தொடர்பான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .