Editorial / 2021 ஜனவரி 06 , மு.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா. நிரோஸ்
கஷ்டப் பிரதேசப் பாடசாலைகளுக்கு விமானப் படை வீரர்களை ஆசிரியர்களாக நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஆசிரிய சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன எனத் தெரிவித்த எதிர்க்கட்சியின் எம்.பியான ரோஹினி கவிரத்ன, இதனூடாக கல்வியை மேம்படுத்த முடியுமா? எனக் கேள்வியெழுப்பினார்.
புத்தாண்டுக்கான முதலாவது அமர்வு நேற்று (05) நடைபெற்றது. அதில், வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்திலேயே மேற்கண்டவாறு கேள்வியெழுப்பிய அவர், கெபிடிகொல்லாவ, வவுனியா உள்ளிட்ட கஷ்டப் பிரதேசப் பாடசாலைகளுக்கே இவ்வாறான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன என, அச்சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன எனச் சுட்டிக்காட்டினார்.
'ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களைக் கற்பிக்க, விமானப் படை வீரர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டுமென விமானப் படைத்தளபதி, கல்வி அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும், அந்தக் கோரிக்கையை கல்வி அமைச்சின் செயலாளர் ஏற்றுக்கொண்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது' என்றார்.
விமானப்படை வீரர்களை ஆசிரியர்களாக நியமிப்பது, ஆசிரியர் நியமனங்கள் தொடர்பான சட்டங்களை மீறுவதாகும். இவ்வாறான நியமனங்களால் கல்வித் தரத்தை மேம்படுத்த முடியுமா? எனவும் இதன்போது வினவினார்.
இதற்குப் பதிலளித்த கல்வி அமைச்சர், விமானப் படை வீரர்களை ஆசிரியர்களாக நியமிப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எனினும், இதுதொடர்பில் ஆராய்ந்து பார்த்துப் பதிலளிப்பேன் என்றார்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago