George / 2017 ஜூன் 08 , மு.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜே.ஏ.ஜோர்ஜ்
'வகுப்பு பகிஷ்கரிப்பு செய்து பல்கலைக்கழகத்துக்கு வராமல் வீட்டில் இருக்கும் மாணவர்களுக்கு மகாபொல புலமைப்பரிசில் வழங்க முடியாது. அவ்வாறானவர்களுக்கு அதனை வழங்கவும் இயலாது' என, சபை முதல்வரும் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைசருமான லக்ஷ்மன் கிரியெல்ல, தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் 21/2 இன் கீழ் உரையாற்றிய ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்தன எம்.பி, சைட்டத்து எதிரான போராடும் பல்கலைக்கழக மாணவர்கள் 7ஆயிரம் பேருக்கு மகாபொல புலமைபரிசில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
அதற்கு பதிலளித்த லக்ஷ்மன் கிரியெல்ல, “பல்கலைகழகத்துக்கு சமூகமளிக்காத மாணவர்களுக்க மகாபொல வழங்கமுடியது. அவ்வாறானவர்களுக்கு அதனை வழங்கவா சொல்கின்றீர்கள். வறுமையான மாணவர்களுக்காகவே மகாபொல புலமை பரிசிலை, முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத் முதலி, உருவாக்கினார். எனினும், பல்கலைக்கழகத்துக்கு சமூகமளிக்காதவர்களுக்கு அதனை வழங்கும் ஏற்பாடுகளை செய்யவில்லை” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .