2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த மனைவி, மகள் மீது அசிட் வீச்சு

Editorial   / 2019 பெப்ரவரி 15 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தாய் மற்றும் அவரது மகள் மீது, வீட்டுக்குள் நுழைந்துள்ள இருவர், அசிட் வீசிவிட்டுத் தப்பிச்சென்ற சம்பவமொன்று, நேற்று (14) இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்கெக்குலாவ, போலகெவத்த, அமல்கா இல்லம் என்ற வீட்டிலிருந்தவர்கள் மீதே, இவ்வாறு அசிட் வீசப்பட்டுள்ளது.

சம்பவத்தில் எரிகாயங்களுக்கு இலக்கான அவ்விருவரும், ஆந்தபான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக, மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பின்னர், மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த பிரதாபசிங்க ஆரச்சியே விஜித்தா என்ற 39 வயதுத் தாய், உயிரி​ழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவரின் கணவர், கடந்த 5 மாதகாலமாக, மனைவி, மகளைப் பிரிந்திருந்த நிலையில், நேற்றிரவு, மற்றுமொரு நபருடன் வந்திருந்த அவர், தங்கள் மீது அசிட் வீசியதாக, குறித்த நபரின் மகள், பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .