2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வீதியில் சுற்றித்திரிந்த இருவருக்கு கொரோனா

Freelancer   / 2021 ஓகஸ்ட் 21 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில்   வவுனியா நகரில் சுற்றித்திரிந்தவர்களுக்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக வவுனியா நகரின் முக்கிய பகுதிகளில் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸாரின் ஏற்பாட்டில் இன்று காலை அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, எ9 வீதி நீதிமன்றத்திற்கு அருகாமையில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 2 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து குறித்த இருவரும் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

குறித்த நடவடிக்கைகளை மாவட்ட மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார் பார்வையிட்டிருந்ததுடன், குறித்த செயற்பாட்டினை அனைத்து பகுதிகளிற்கும் விஸ்தரிப்பது தொடர்பாக ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X