Editorial / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திசாநாயக்கவின் மறைவை அடுத்து ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்தை நிரப்புவது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த வெற்றிடத்தை நிரப்புவது தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெயர்ப்பட்டியல் முன்வைக்கப்பட்டதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமது தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியை சாந்த பண்டார இராஜினாமா செய்த நிலையில், அவரது இடத்துக்கு மற்றுமொருவரின் பெயரை பரிந்துரைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் கேட்டிருந்தது.
எனினும், இதுவரை அதற்கு பதில் எதுவும் வழங்கப்படவில்லை என, தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
10 minute ago
27 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
27 minute ago
2 hours ago