2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

வெளிநாடு செல்லும் அரச ஊழியர்களுக்கு அறிவிப்பு

Freelancer   / 2022 ஓகஸ்ட் 24 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பளமில்லாத விடுமுறையில் வெளிநாடுகளுக்குச் செல்லும் அரச ஊழியர்கள், ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை இலங்கைக்கு அனுப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள வங்கி அமைப்பின்  மூலம் தமது பெயரில் உள்ள வெளிநாட்டு நாணயக் கணக்குக்கு பணத்தை அனுப்ப வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்லும் ஊழியர்களில் முதன்மை மட்ட அதிகாரிகள், 100 அமெரிக்க டொலர்களும், இரண்டாம் நிலை அதிகாரிகளுக்கு 200 அமெரிக்க டொலர்களும் அனுப்ப வேண்டும்.

மூன்றாம் நிலை அதிகாரிகள் 300 அமெரிக்க டொலர்களும், உயர் மட்ட அதிகாரிகள் 500 அமெரிக்க டொலர்களும் இலங்கைக்கு அனுப்புவது கட்டாயமாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X