Thipaan / 2017 மே 23 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்கவும் அவருடைய மனைவியும், அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு, கொழும்பு மேல் நீதிமன்றம், இன்று (23) அனுமதியளித்தது.
தமது சேவை பெறுநரும் அவருடைய மனைவியும் தங்களுடைய மகளின் உயர்கல்வியில் நிமித்தம் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல அனுமதிக்குமாறு , அவருடைய சட்டத்தரணியால் கோரப்பட்டதற்கு இணங்கவே, கொழும்பு மேல் நீதிமன்றம்அனுமதி வழங்கியது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .