Janu / 2026 பெப்ரவரி 17 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 18 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகள் தொகையை நாட்டிற்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற இலங்கையர் ஒருவர், செவ்வாய்க்கிழமை (17) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கம்பளை பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய வர்த்தகர் என தெரியவந்துள்ளது.
குறித்த நபர் செவ்வாய்க்கிழமை (17) அதிகாலை 02:45 மணி அளவில் ஐக்கிய அரபு எமிர் இராச்சியத்தின் சார்ஜா நகரில் இருந்து ஏர் அரேபியா (Air Arabia) G-9587 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த பயணப் பொதியில் இருந்து 'பிளாட்டினம்' (Platinum) மற்றும் 'மான்செஸ்டர்' வகையான 12,000 சிகரெட்டுகள் அடங்கிய 60 கார்ட்டூன் அட்டைப் பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட சிகரெட் தொகையுடன் அவர் எதிர்வரும் 25ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
டி.கே.ஜி. கபில

49 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026