Janu / 2025 ஒக்டோபர் 05 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியுடை வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற ஒருவர், ஞாயிற்றுக்கிழமை (05) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் புத்தளம்,கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய மீனவர் என தெரியவந்துள்ளது.
குறித்த நபர் ஞாயிற்றுக்கிழமை (05) அதிகாலை 05.25 மணியளவில் இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-226 மூலம் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.
அவர் கொண்டு வந்த 02 பயணப் பைகளை சோதனையிட்ட போது அதில் இருந்து 30,000 "பிளாட்டினம்" சிகரெட்டுகள் அடங்கிய 150 சிகரெட் அட்டைப்பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளை புதன்கிழமை (08) அன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டி.கே.ஜி.கபில

25 minute ago
1 hours ago
09 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago
09 Dec 2025