2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வெவ்வேறு பிரதேசங்களில் நீரி​ழ் மூழ்கி மூவர் உயிரிழப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 09 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிரிய – மாவக்ஓயா பகுதியில் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

மாலபே பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இங்கு நீராடுவதற்காக குறித்த இருவர் உள்ளடங்கலாக நேற்று (08)  3 இ​ளைஞர்களும் 3 யுவதிகளும் வருகை தந்ததாகவும், அவர்களில் இரு இளைஞர்களே நீரிழ் மூழ்கியதாகவும் தெரிவித்தனர்.

அத்தோடு, நேற்றைய தினம் (08) பிற்பகல் நாவலப்பிட்டி – வரக்காவ விகாரைக்கு அருகில் மகாவலி கங்கையில் நீராடச் சென்ற 20 வயது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழ​ந்துள்ளதாகவும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .