Editorial / 2026 ஜனவரி 11 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

அசாம் மாநிலம் நகன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிதான் ஹசாரிகா (வயது 33). இவருடைய மனைவி ஜிந்தி. இவர்கள் கோவை கணபதி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். பிதான் ஹசாரிகா பிளம்பராக வேலை பார்த்து வருகிறார்.
பிதான் ஹசாரிகாவிற்கு, வடமாநில பெண்களுடன் தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. அவர் பெண்களுடன் உல்லாசமாக இருந்து வந்தார்.
தன்னுடன் தொடர்பில் இருந்த பெண்களுடன் அடிக்கடி வீடியோ கால் மூலம், பிதான் ஹசாரிகா பேசி வந்தார். கணவரின் செல்போனை வாங்கி பார்த்த மனைவி ஜிந்தி, கணவரை கண்டித்தார். ஆனால் அவர் பெண்களுடன் இருந்த தொடர்பை கைவிடவில்லை
சம்பவத்தன்று ஜிந்தி வெளியில் சென்று இருந்தபோது, பிதான் ஹசாரிகா வீட்டிற்கு இளம்பெண் ஒருவரை அழைத்து வந்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டிற்கு வந்த ஜிந்தி இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் கணவர் மீது ஜிந்திக்கு ஆத்திரம் ஏற்பட்டது. கணவரை கண்டித்ததால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது பிதான் ஹசாரிகா, தனது மனைவி ஜிந்தியை, சொந்த ஊரான அசாம் மாநிலத்துக்கு சென்று விடுமாறு மிரட்டியதாக தெரிகிறது.
இந்த நிலையில் கணவனுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என முடிவு செய்தார்.
சம்பவத்தன்று வேலை முடிந்து வந்த பிதான் ஹசாரிகா மதுபோதையில் படுத்து தூங்கினார். கணவர் மீது கோபத்தில் இருந்த ஜிந்தி, சமையல் அறையில் இருந்து கத்தியை எடுத்து வந்து பிதான் ஹசாரிகாவின் மர்ம உறுப்பை அறுத்து வீசினார். பின்னர் கணவரை அறையில் வைத்து பூட்டிவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டார்.
அறையில் இருந்து வெளியே வரமுடியாத பிதான் ஹசாரிகா, கத்தி கூச்சல் போட்டு அருகில் வசிப்பவர்களை உதவிக்கு அழைத்தார். சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் பிதான் ஹசாரிகாவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து ஜிந்தியை கைது செய்தனர்.
17 minute ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
21 Jan 2026
21 Jan 2026