2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டவர் கைது

Freelancer   / 2023 செப்டெம்பர் 30 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நுவரெலியா பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் ஒரு லட்சத்து 37 ஆயிரம் ரூபாவை மோசடி செய்துள்ளார் என கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் கடுகன்னாவை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி, மீரந்தெனிய பகுதியை சேர்ந்த 51 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என  பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X