2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

வேலைவாய்ப்பு வழங்கிய போலி மருத்துவர் கைது

Simrith   / 2024 மார்ச் 26 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தான் ஒரு மருத்துவர் எனக் கூறி இஸ்ரேலில் விவசாய துறையில் வேலை வாய்ப்புகளை வழங்குவதாகத் தெரிவித்து தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் உயர் அதிகாரிகளின் பெயர்களை கூறி பணத்தை மோசடி செய்த நபரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLFEB) சிறப்பு புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர்.

கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் வசிக்கும் சந்தேக நபர், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் ஊடாக வெளிநாட்டு வேலைகளை வழங்க முடியும் எனக் கூறியுள்ளதுடன், அவர் ஒரு மருத்துவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

பணத்தை பெற்றுக் கொள்வதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் நாரஹேன்பிட்டியில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு ஆட்களை அழைத்துள்ளார்.

சந்தேகநபர் ஒன்பது பேரிடம் இருந்து 7,650,000 ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவருக்குப் பணம் வழங்கிய நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை ஏப்ரல் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த மோசடிக்கு உதவிய சந்தேக நபரின் மனைவி தலைமறைவாகியுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

இதேவேளை, இஸ்ரேலில் விவசாயத் துறையில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்காக எந்தவொரு நபருக்கும் பணம் செலுத்த வேண்டாம் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இரு நாடுகளுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலில் விவசாயத் துறையில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன என அமைச்சர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X