2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

‘வைத்தியசாலையை மத்திய ​அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்’

Editorial   / 2018 டிசெம்பர் 31 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா மாவட்ட வைத்தியசாலையை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்து, குறித்த வைத்தியசாலையின் வைத்தியர்கள் உள்ளிட்ட அலுவலக பணியாளர்கள் 900 பேரின் கையொப்பத்துடனான கடிதமொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண சபைக்குரிய இந்த வைத்தியசாலையின் அடிப்படை வசதிகள், சேவைகள் மிகக் குறைந்த நிலையில் காணப்படுவதால், இந்த வைத்தியசாலையை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்று முன்னேற்றகரமான நிலைக்குக் கொண்டுச் செல்லுமாறும்  கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த வைத்தியசாலையில் கடந்த 5 வருடமாக  நிரந்தர பணிப்பாளர் ஒருவர் இன்மையால், வைத்தியசாலையின் முகாமைத்துவ நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாகவும் வைத்தியசாலையின் அலுவலக பணியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே இவை தொடர்பில் கவனமெடுத்து குறித்த வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வர ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கம்பஹா மாவட்ட வைத்தியசாலையின் அலுவலக பணியாளர்கள் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .