2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

வைத்தியசாலையை மூடியது கொரோனா

Nirosh   / 2021 பெப்ரவரி 15 , பி.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நீலமேகம் பிரசாந்த்)

அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நபர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார். இதனால் அந்த வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் தொடர்ச்சியாக ஏழு நாட்கள் சிகிச்சைப்பெற்று வந்த 62 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குறித்த நபர் உயிரிழந்திருந்த நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்டப் பிசிஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அக்கரப்பத்தனை வைத்தியசாலை முழுவதுமாக மூடப்பட்டு, வைத்தியசாலையின் ஊழியர்கள் மற்றும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் தங்கியிருந்தவர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X