2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

ஷங்ரி லா ஹோட்டல் கூடாரத்தில் தீ

George   / 2016 ஜூன் 01 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை மிரிச்சவிலயில் உள்ள ஷங்ரி லா ஹோட்டலில் இன்று இரவு இடம்பெற்ற வாணவேடிக்கை நிகழ்வின்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வாணவேடிக்கையின் போது வெடித்து சிதறிய பட்டாசுகள் அருகில் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தின் கூரையில் விழுந்து தீ பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இந்த தீ விபத்தில் ஹோட்டலுக்கும் எந்தவொரு நபருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷங்ரி லா ஹோட்டல், இன்று புதன்கிழமை(01) திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .