S.Renuka / 2026 பெப்ரவரி 03 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ சற்று முன்னர் கொழும்பு நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆிராகியுள்ளார்.

மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 'சிறிலிய' என்ற பெயரில் பயன்படுத்தி வங்கி கணக்கு தொடர்பில் பொலிஸ் நிதி குற்றவியல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு ஜனவரி 27ஆம் பொலிஸ் நிதி குற்றவியல் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், தனிப்பட்ட விடயம் காரணமாக ஷிரந்தி ராஜபக்ஷ ஜனவரி 27ஆம் அன்று பொலிஸ் நிதி குற்றவியல் பிரிவில் முன்னிலையாவில்லை.
இதனால் பெப்ரவரி 3ஆம் திகதி காலை 09.30 மணிக்கு பொலிஸ் நிதி குற்றவியல் பிரிவில் முன்னிலையாகுமாறு ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு அமைப்பு விடுக்கப்பட்டது.
8 minute ago
23 minute ago
41 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
23 minute ago
41 minute ago
58 minute ago