Editorial / 2019 ஓகஸ்ட் 23 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவுக்கு எதிரான முறைப்பாடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி ஒருவரால் முன்வைக்கப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடே இவ்வாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஷானி அபேசேகரவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் அவரது வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்குமாறும் கோரிக்கை விடுத்து இந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சட்டத்தரணியான ஜாலிய சமரசிங்கவினால் இந்த தனிப்பட்ட முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த தனிப்பட்ட முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள எந்தவொரு சட்டபூர்வமான அடிப்படையும் இல்லை என்பதால் நிராகரிக்கப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
19 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago