Editorial / 2019 ஜூன் 10 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் மொஹமட் ஷாபிக்கு எதிராகக் கிடைக்கப்பெற்றுள்ள முறைபாடுகளுக்கமைய, விசாரணைகள் உரிய முறையில் இடம்பெறவில்லை என, குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதியால் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென, குருநாகல் போதனா வைத்தியசாலை கிளையின் செயலாளர் வைத்தியர் இந்திக ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நிபுணர் குழு நியமிக்கப்படாவிட்டால், இந்த வாரத்துக்குள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த வைத்தியருக்கு எதிராக, நேற்றைய தினம் எம்பிலிப்பிட்டிய, களுத்துறை நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025