Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 04 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மையில் இடம்பெற்ற பங்களாதேஷ் பொதுத்தேர்தலில், மகத்தான வெற்றியைப் பெற்றுக்கொண்ட பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அம்மையாருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஷேக் ஹசீனா அம்மையாருக்கு, விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ள ஜனாதிபதி, பிறந்துள்ள புத்தாண்டில், அவரது சகல செயற்பாடுகளும் வெற்றியடைய வேண்டுமென வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ஷேக் ஹசீனா அம்மையார் பிரதிநிதித்துவம் செய்யும் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றதினூடாக, பங்களாதேஷ் மக்கள், ஷேக் ஹசீனா அம்மையார் மீதும் அவரது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடைமுறைக்குச் சாத்தியமானதும் வெற்றிகரமானதுமான கொள்கைகள் தொடர்பில் கொண்டுள்ள நம்பிக்கை, மீண்டும் ஒரு முறை உறுதி செய்யப்பட்டுள்ளதென, ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பங்களாதேஷுக்கும் இலங்கைக்கும் இடையேயான நீண்டகால தொடர்புகள், பொதுவான அபிலாஷைகள் மற்றும் பரஸ்பர நம்பிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சி டைந்துள்ளதுடன், அந்தத் தொடர்புகள், பொருளாதார, அரசியல், பாதுகாப்பு மற்றும் கலாசாரம் உள்ளிட்ட துறைகளின் ஊடாக தற்போது விரிவடைந்துள்ளதாகவும், ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இரு நாடுகளுக்கிடையே காணப்படும் இந்த உறுதியான தொடர்புகளும் நட்புறவும், எதிர்காலத்தில் மென்மேலும் மேம்படுத்தப்படும் எனத் தான் நம்புவதாகவும், ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago