2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஸ்ரீ லங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கு குழு நியமனம்

Editorial   / 2019 ஜனவரி 07 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கன் விமான சேவையில் நிலவும் பிரச்சினைகளைச் சீர்செய்து, அதனை மறுசீரமைப்பதற்கான கருத்துகள், முன்மொழிவுகளைப் பெற்று, பரிந்துரைகளை முன்வைப்பதற்கான குழுவொன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்னவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாக கலாநிதி ஹர்ஷ த டி சில்வா, கலாநிதி நந்தலால் வீரசிங்க, கலாநிதி தர்மரத்ன ஹேரத், பேராசிரியர் டி.பி.பீ.எச்.திசா பண்டார, வீ.கனகசபாபதி, எல்.எஸ்.ஐ.ஜயரத்ன, விராஜ் தயாரத்ன, மஹேன் கோபல்லவ, வசந்த குமாரசிறி, அஜித் அமரசேகர, திசுரி வன்னியாரச்சி ஆகியோர் அங்கத்துவம் வகிக்கின்றனர்.

இலங்கை விமான சேவையின் செயற்பாடு தொடர்பில் கடந்த 04ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, ஜனாதிபதியால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கமைய, இந்த குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கன் விமான சேவையை முன்னேற்றுவதற்கான முன்மொழிவுகள், கருத்துகள் ஆகியவற்றை இன்று முதல் இக்குழுவிடம் சமர்ப்பிக்கும் சந்தர்ப்பம் அனைத்துத் தரப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்குள் இக்குழுவின் பரிந்துரைகளை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

அந்தப் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு, ஸ்ரீ லங்கன் விமான சேவை தொடர்பான எதிர்கால தீர்மானங்கள், ஜனாதிபதியால் மேற்கொள்ளப்படவுள்ளன.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (07) முற்பகல் குழுவின் உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கியதன் பின்னர் ஜனாதிபதி குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .