2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஹெரோய்ன் ஒப்பந்தம்: இலங்கை பிரஜைக்கு 10 வருடங்கள் சிறை

George   / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோய்ன் கடத்தலுக்கு இடைத் தரகராக செயற்பட்ட குற்றச்சாட்டில் குவைத் நாட்டில் கைதுசெய்யப்பட்ட நபர் தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்த மேன் முறையீட்டை அந்த நாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஏற்கெனவே வழங்கப்பட்ட, 10 வருடங்கள் சிறை மற்றும் 50,000 திர்ஹாம் அபராதம் என்பவற்றுக்கு எதிராகவே குறித்த நபர் மேன்முறையீடு செய்திருந்தார்.

எப்.எஸ் 32 என்ற விமானத்தில் குவைத் நாட்டுக்கு வந்த போது குறித்த நபர் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 திகதி இரண்டு சாரதிகளுடன் வந்தபோது கைதுசெய்யப்பட்டிருந்தார்.

குறித்த நபர், 3.2 கிலோகிராம் ஹெரோய்னை கொண்டு வந்து குறித்த சாரதிகளிடம் ஒப்படைத்த போது கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் செய்தியை குவைத் ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X