2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

ஹெரோய்ன் விவகாரம்: 16 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

Kanagaraj   / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் கடலில் வைத்து அண்மையில், சுற்றிவளைக்கப்பட்ட படகிலிருந்து 101 கிலோகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்ட விவகாரத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 16பேரின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஈரான் பிரஜைகள் 13பேரினதும் அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கியதாக கூறப்படும் இலங்கைப்பிரஜைகள் மூவரினதும் விளக்கமறியலே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

அந்த 16 பேரையும் மே மாதம் 03ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதிவான் லங்கா ஜயரத்ன, இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .