Editorial / 2019 மே 01 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஸ்லிம் பெயருடன் பள்ளிவாசலில் கடமையாற்றிய தமிழர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பண்டாரகம- அட்டுலுகம மாராவ பிரதேசத்தின் பைகுர் ரஹ்மான் பள்ளியில் வைத்தே பெருமாள் சிவலிங்கம் என்ற குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரும், இராணுவத்தினரும் இன்று பண்டாரகம பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
5 வருடங்களுக்கு முன்னர் பண்டாரகம பிரதேசத்துக்கு வருகைத் தந்த குறித்த நபர், மொஹமட் ஹக்கீம் என்ற பெயருடன் பள்ளிவாசலில் கடமையாற்றி வந்துள்ளதுடன், நாளொன்றுக்கு 5 தடவைகள் மத போதனைகளையும் நடத்தியுள்ளாரென ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதுடன், இவர் இதுவரை கிராம அலுவலரைக் கூட சந்தித்து எவ்வித பதிவையும் மேற்கொண்டதில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இவரது வங்கிக் கொடுக்கல் வாங்கல்கள் சிவலிங்கம் என்ற பெயரிலேயே முன்னெடுக்கப்பட்டு வந்தள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
9 hours ago
9 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
15 Dec 2025