2025 ஜூலை 10, வியாழக்கிழமை

‘ஹக்கீம், ரிஷாட்டின் ஆதரவு ரணிலுக்கே’

Editorial   / 2018 நவம்பர் 06 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவைத் தெரிவிப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூம் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ர​ஷாட் பதியூதீன் ஆகியோர் ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்கும் விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், நாடாளுமன்றத்தை விரைவில் கூட்டுவது தொடர்பான நிலைப்பாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி உறுதியாகவிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .