Freelancer / 2021 ஓகஸ்ட் 02 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், எம்.கிருஸ்ணா, பி.கேதீஸ்
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததால், அவ்வீதியினூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (02) பிற்பகல் குறித்த மரம் விழுந்ததன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள், கொட்டகலை முதல் போகாஹவத்தை வரையான மாற்று வீதியை தோட்ட பாதையின் ஊடாகப் பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திம்புள்ள பத்தனை பொலிஸ் அதிகாரிகளும் கொட்டகலை பிரதேச சபையினரும், வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும் இணைந்து வீழ்ந்த மரத்தை அகற்ற நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.
வீதியின் நடுவே விழுந்த மரத்தில் இருந்த பல பெரிய குளவி கூடுகள் கலைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




5 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago